Latestஉலகம்

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்: 6.7 ரிக்டரில் பதிவு!

சுவா, நவ. 19- தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானது. தெற்கு பசிபிக் கடலில் உள்ளது பிஜி தீவுகள்.

இது 300 தீவுகளை கொண்டது. இங்குள்ள நேரப்படி காலை 9.25க்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அங்கு 6.7 ரிக்டரில் நிலநடுக்க பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் சுவாவுக்குக கிழக்கே 283 கி. மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம்- பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சுனாமி எச்சரிக்கையும் விடுவிக்கவில்லை. இதற்கு முன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker