Latestமலேசியா

அரசு அமைப்பதை தடுக்க கூட்டணிக்குள்ளேயே குழப்பம் செய்தார்கள்!! –மகாதீர்

கோலாலம்பூர், நவ.20- கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்து, அரசாங்கத்தை அமைக்கும் வேளையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள சில உறுப்பினர்கள், அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று சில முயற்சிகள் எடுக்கப் பட்டதாக அவர் சொன்னார்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இஸ்லாம் மதம் மதிக்கப் படாது என்று சிலர் பயப்பட்டனர். அனைத்து முஸ்லீம்களும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால், இஸ்லாம் மதத்திற்கு எவ்வித பாதகமும் நேராது என்று சிலர் கருதினர்.

“அவ்வாறு செய்வதன் வாயிலாக, மலாய்-முஸ்லீம் அரசாங்கம் அமைக்கப் படும் என்று அவர்கள் எண்ணம் கொண்டனர். ஆனால், அவர்களின் எண்ணம் தவறு என்று ஆலோசனைகள் வழங்கப் பட்டன” என்று மகாதீர் சொன்னார்.

மலாய்-முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுப்பினர்களை, அந்த சிலர், அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தினர் என்று கூறிய மகாதீர், அந்தச் ‘சிலர்’ யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதனால் தான், கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், அந்த வெற்றி குறித்து தகவல் அறிவிக்கப்படாமல் கால தாமதம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று எங்களுக்கு இரவு 8.30 மணிக்கே தெரிந்து விட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் நள்ளிரவு 2 மணி வரை தெரிவிக்கப் படவில்லை.

நாங்கள் பல பிரச்சனைகளை சந்தித்தோம். கூட்டணியின் உள்ளுக்குள்ளேயே சிலரும், அம்னோ மற்றும் பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று நினைத்தனர்” என்று மகாதீர் விவரித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker