Latestஉலகம்

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா சர்மா மெழுகுச்சிலை!

சிங்கப்பூர், நவ.20-சிங்கப்பூர் நகரில் உள்ள ‘மேடம் டுசாட்ஸ்’ மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டுவரும் பிரபலங்களுக்கு மெழுகினாலான ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்து கொள்வதுண்டு.

சிங்கப்பூரில் உள்ள அருக்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அபிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் ஆளுயர மெழுகு சிலையும் திறக்கப்பட்டது. இந்த மெழுகுச் சிலையின் கையில் ஒரு விலையுயர்நத கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா சிலையின் கையில் உள்ள கைபேசி மூலமாகவே செல்பி எடுத்து அதை சமூகவலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker