Latestசினிமா

சிவாஜியின் பேரனை மணந்தார் சுஜா வருணி

சென்னை, நவ. 20- நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாருக்கும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் திருமணம் நடந்தேறியது.

‘பிளஸ் டூ’ என்ற தமிழ்ப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சுஜா வருணி, ‘மிளகா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்சசியில் பங்கேற்று பிரபலமான சுஜா வருணியும்- சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவர்களது திருமணம் சென்னையில் நடந்து முடிந்தது.

திருமணத்தில் நடிகர் சிவக்குமார், அஸ்வின், எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் விஷ்ணுவர்தன், சினேகன், ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி, லிசா, சுஹாசினி, ராதிகா சரத்குமார்,விஜி சந்திரசேகர், கணேஷ் வெங்கட்ராம், சந்தியா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker