Latestமலேசியா

வேதமூர்த்தி அமைச்சராக நீடிக்க மலேசிய இந்து சங்கம் ஆதரவு!

கோலாலம்பூர், நவ.20- பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க மலேசிய இந்து சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷான் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

நாட்டில் ஒற்றுமை மேம்பட, பிரதமர் துன் மகாதீர், செனட்டர் வேதமூர்த்திக்கு தனது பிரதமர் துறையிலேயே அமைச்சர் பதவியைக் கொடுத்து, நாட்டில் நல்லிணக்கமும் சமுதாய மறுமலர்ச்சியும் மேலும் வலுப்படுத்தும் கடமையையும் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர் என்னும் வகையில் பன்னாட்டு மக்களும் மலேசியக் கூட்டு சமுதாயமும் சம்பந்தப்பட்ட கருத்தை பற்றி முழுமையாக பேச முடியாமல் போனது வருத்தத்திற்குரியது.

அதேவேளையில், சில பொறுப்பற்ற தரப்பினர் வேதமூர்த்தியின் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவித்து, அவர் அமைச்சர் பதவிலிருந்து விலக வேண்டும் என கையெழுத்து ஆதரவு திரட்டி வருவது கவலையளிக்கும் செயலாகும்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கொள்கைகளைக் கொண்டு வருவது சற்று கடினம் தான் என்றாலும், அதனைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரை பதவி விலகுமாறு கூறுவதை மலேசிய இந்து சங்கம் என்றும் ஏற்காது.

நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இந்து சமய விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க மலேசிய இந்து சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. -இவ்வாறு அந்த அறிக்கையில் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker