Latestமலேசியா

ஐசெர்ட் சாசனம்: அரசியலமைப்புக்கு எதிரானது! – நஜிப் திட்டவட்டம்

கோலாலம்பூர், நவ.21- அனைத்து வடிவிலான இன பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் ஐசெர்ட் (ICERD) எனப்படும் அனைத்துலக சாசனம், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. எனவே அதில் கவனத்தை செலுத்துவதை விட்டு விட்டு, தொய்வடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியை பாருங்கள் என்று அரசாங்கத்திற்கு அறிவுரை கூறினார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்.

கடந்த 2011 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஐசெர்ட் தொடர்பில் தேசிய முன்னணி அரசாங்கம் ஆய்வு நடத்தியதாகவும், அதன் வாயிலாக நாட்டின் சமூக ஒப்பந்தங்களுக்கு எதிராக அந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதடென்பது தெரிய வந்ததாக நஜிப் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, ஐசெர்ட்டை அமல்படுத்தும் எண்ணத்தை தே.மு அரசாங்கம் கைவிட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு, தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமர் துறையின் கீழ், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு இலாகா, ஐசெர்ட் தொடர்பான நுட்பக் குழுவை உருவாக்கி ஆய்வு செய்தது என்று நஜிப் தனது முகநூல் பக்கத்தில் விவரித்தார்.

மலேசியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் 153-ஆவது சட்டமான, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளுக்கு புறம்பாக ஐசெர்ட் அமைந்துள்ளது என்பதால், அது அமல்படுத்தப் படக் கூடாது என்று சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“ஐசெர்ட்டின் அம்சங்களை நன்றாக ஆராய்ந்து தெரிந்துக் கொள்வதற்காக நுட்பக் குழு அமைக்கப் பட்டது. மீண்டும் அது குறித்த விவரங்கள் 2015-ஆம் ஆண்டும் திரட்டப் பட்டது.

“அந்த ஆய்வின் வாயிலாக, இது அமல்படுத்தப் பட்டால், நாட்டின் உருவாக்கத்திற்கு தூணாக அமைந்த அரசியலமைப்பு சட்டம் மற்றும் சமூக ஒப்பந்தங்கள் மீறப் படும் என்று தெரியவந்தது. அதனால், அதனை அமல்படுத்தும் முயற்சிகள் கைவிடப் பட்டன” என்றார் அவர்.

அந்த அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திடப் படும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பிடிவாதமாக கூறுமேயானால், பலர் கோபம் அடைவார்கள் என்று நஜிப் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker