Latestமலேசியா

‘ஒரே மலேசியா கடை’ மறுசீரமைக்க அரசாங்கம் திட்டம்

கோலாலம்பூர், நவ.21- ‘ஒரே மலேசியா மக்கள் கடைகள் மறு சீரமைக்கப் பட்டு, தரமான பொருட்களை அங்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஈடுபடவிருப்பதாக உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு கூறியது.

கே.ஆர்.1.எம் என்றழைக்கப் படும் அந்தக் கடைகளில் பொருட்களின் விலைகள் குறைவாக இருந்த போதிலும், அங்கு தரமான பொருட்கள் விற்பனை செய்யப் படவில்லை என்று அவ்வமைச்சின் துணை அமைச்சர் சோங் சியேன் ஜென் கூறினார்.

“பிப்ரவரி மாதம் தொடங்கி, கே.ஆர்.1.எம் கடைகள் மறுசீரமைக்கப் படும். தேவையான மலிவு சேவையை வழங்கக் கூடிய இரண்டு மூலோபாய பங்காளிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதில் எவ்வித சூழ்ச்சியும் நிகழ்த்தப் படாமலிருக்கும் பொருட்டு, மேலும் சில கூட்டாளர்கள் இந்தச் சேவையில் இணைய வேண்டும். “அந்தக் கடைகளில் இனிமேற்கொண்டு தரம் குறைந்த பொருட்கள் விற்பனை செய்யப் படாது. மலிவான விலையில், தரமான பொருட்கள் அங்கு விற்பனை செய்யப் படும்” என்றார் அவர்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker