Latestஇந்தியா

ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய ஒரு வயது குழந்தை: உயிர்தப்பிய அதிசயம்! -(VIDEO)

லக்னோ, நவ. 21- உத்தரபிரதேசத்தில் ரயில் செல்லும் நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்து இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த குழந்தைக்கு ஒரு வயது தான் ஆகிறது. இந்தக் குழந்தை ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும் ரயில் அக்குழந்தைக்கு மேலாக சென்றதும் வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்தக் குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தண்டவாளத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்தக் குழந்தை சிக்கியது.

இதை பார்த்ததும் அந்தக் குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் அதற்குள் அங்கு ரயில் வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தைக்கு மேலாக ரயில் வேகமாக சென்றது.

அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து நடுங்கி அலறினர். ஆனால் ரயில் சென்று முடிக்கும் வரை எதுவுமே செய்ய முடியாது என்பதால் ரயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது. இந்நிலையில் ரயில் சென்ற பின் அந்தக் குழந்தையை தூக்கினர்.

இந்த விபத்தில் அந்தக் குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. குழந்தைக்கு விபத்தில் சிறுகாயம் கூட ஏற்படவில்லை. இந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடுத்து குழந்தையை அங்கிருந்தவர் எல்லோரும் தூக்கி வைத்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker