Latestஉலகம்

பாப்புவா நியூகினி நாடாளுமன்றத்தினுள் படைகள் தாக்குதல்! -சம்பளம் எங்கே?

போர்ட் மோரஸ்பி, நவ.21-பாப்புவா நியூகினியாவில் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயுதப் படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

வறுமையில் வாடும் பாப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில் சமீபத்தில் ‘ஏபெக்’ என்று அழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உச்சநிலை மாநாட்டின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் உள்நாட்டு படையினருக்கும் போலீசாருக்கும் உரிய அலவென்சுகளை அந்நாட்டு அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளைத் உடைத்தெறிந்தனர். இத்தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அலன் போர்டு என்ற எம்.பி கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப் படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினர் எனக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker