Latestமலேசியா

‘செல்வாக்குமிக்க பெண்மணி’ – நூருல் இஷாவுக்கு விருது!

சிங்கப்பூர், நவ. 21- சிங்கப்பூரில் நடந்து வரும் ஆசிய ரீதியிலான தலைமை நிர்வாக செயல்நிலை அதிகாரிகளின் உச்சநிலை மாநாட்டில்,செல்வாக்குமிக்க பெண்மணி -2018′ என்ற விருது பிகேஆர் எம்பியான நூருல் இஷாவுக்கு வழங்கப் பட்டுள்ளது.

‘தலைமைத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள்’ என்ற கருப்பொருளில் அமைந்துள்ள இந்த மாநாட்டில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றிவரும் பணி மற்றும் இப்பிராந்தியத்தில் ஓர் முன்னுதாரணப் பெண்ணாக திகழ்ந்து வருவது ஆகியவற்றின் அடிப்படையில் பெர்மாத்தாங் பாவ் எம்பியான நூருல் இஷாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பற்றிக் கருத்துரைத்த நூருல் இஷா, “பெண்களின் ஆளுமையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இது உதவும் என்று நான் நம்புவதால் மட்டுமே இந்த செல்வாக்குமிக்க பெண்மணி என்ற விருதினை நான் ஏற்றுக் கொள்ள முடிகிறது” என்று அவர் சொன்னார்.

மலேசியாவிலுள்ள சமான்யர்களான ஆண்களும் பெண்களும் மறுமலர்ச்சி இயக்கத்திற்கான உந்துதலை எனக்கு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இந்த கௌரவம் உண்மையில் அவர்களுக்குத் தான் சென்று சேர வேண்டும். நமது செல்வாக்கு என்பது குரலெழுப்ப முடியாமல் இருப்போருக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் எத்தகையது என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்று நூருல் இஷா தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker