Latestஉலகம்

பூமிக்கடியில் மாபெரும் நிலத்தடி கடல்! – விஞ்ஞானிகள்

நியூயார்க், நவ.21- விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான் பூமிக் கிரகத்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப் பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமிக் கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப் பிடித்துள்ளனர்.

அதாவது, பூமிக்கு அடியில் பூமியின் மேற்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக அளவிலான கடல் நீர் இருப்பு உள்ளதாம். மேலும் கண்டுப் பிடிக்கப்பட்ட கடல் நீரானது  ஒரு கனிமத்தின் உள்ளே சிக்கி இருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்தக் கண்டுப்பிடிப்புக்கு தலைமைப் பொறுப்பு வகித்தது நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் ஜேக்கப்சன் மற்றும் நியூ மெக்ஸிக்கோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிராண்டன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் கடல்கள் எவ்வாறு உருவாக்கம் பெற்றன. பில்லியன் ஆண்டுகளாக கடல்கள் எவ்வாறு பரந்த அளவை பராமரிக்கின்றன போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான புவியியலாளர்கள் நீர் ஆனது விண்வெளியில் இருந்து வந்த பனிப் படர்ந்த வால்மீன் மோதல்களால் தான் உருவாகின என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதி வரும் நிலையில், நீர் ஆதாரமானது படிப்படியாக பூமியின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டது என்று விஞ்ஞானிகள் இப்போது கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்க அதிர்வு அலைகளை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் போது அதிர்வலைகள் பாறைகளில் ஊடுருவதை விட தண்ணீரில் வெவ்வேறு வேகத்தில் ஊடுருவி செல்லுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker