Latestமலேசியா

EWRF ஏற்பாட்டில் தேசிய அளவிலான கூடைப்பந்து-காற்பந்து போட்டி!

பெட்டாலிங் ஜெயா,நவ.21- கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் தடம் மாறிச் செல்லக் கூடிய வாய்ப்புகள் இணையதளம், ஸ்மார்ட் போன்கள் போன்ற பல சாதனங்களைக் கையாளுகின்ற வசதிகளைப் பெற்றுள்ள இந்தக் காலக் கட்டத்தில் மிக எளிதில் ஏற்படுகின்றன.

ஆரம்பக் கல்வி பெறும் காலத்தில் மாணவர்களுக்கு சிறிது பயம் கலந்த மரியாதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது இருக்கும். ஆனால், இடைநிலைப்பள்ளியில் கால் எடுத்து வைத்ததும் அவர்களிடத்தில் சற்று மாற்றத்தை நாம் பார்க்கலாம். அத்தகைய மாணவர்களை ஓரம் கட்டினால் அவர்கள் சமூகத்திற்கு பாரமாகத்தான் பின்னாளில் உருமாறுவார்கள்.

அவ்வாறு நடக்கக் கூடாது என்பதற்காக பிரச்சனைக்குரிய மாணவர்களை அரவணைத்து அவர்களை நல்வழிப்படுத்தும் உன்னத முயற்சிகளை மேற்கொண்டுவரும் EWRF எனும் கல்வி, சமூகநல ஆய்வு அறவாரியம் நான்காம் ஆண்டாக தேசிய அளவில் சி.எஸ்.ஐ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது.

இந்த விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக கூடைப் பந்து போட்டியும், காற்பந்து போட்டியும் இணைந்து நடத்தப்பட்டன. கூடைப் பந்து போட்டி பெண்களுக்கும், காற்பந்து போட்டி ஆண்களுக்கும் நடந்தன. 13 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 400 மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

முன்னதாக, அந்தந்த பகுதிகளில் உள்ள EWRF கிளைகள் அந்த மாணவர்களுக்கு சில மாதங்களாக பயிற்சிகள் வழங்கின. அதன் பிறகே, இந்தப் போட்டி தேசிய அளவில் நவம்பர் 17-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

கூடைப் பந்து போட்டியில், தெலுக் இந்தான் அணியினர் சாம்பியனாக வாகை சூடினர். அடுத்தடுத்த நிலைகளில் பினாங்கு பி அணியினரும், பினாங்கு ஏ அணியினரும், நான்காவது இடத்தை சுபாங் ஜெயா அணியினரும் வென்றனர்.

அதே சமயம், காற்பந்தாட்டத்தில், சுபாங் ஜெயா அணியினர் சாம்பியனாக வெற்றிப் பெற்றனர். இரண்டாவது நிலையை பினாங்கு பி அணியினரும், மூன்றாவது நிலையை தஞ்சோங் மாலி சூப்பர் ஸ்ரைக்ஸ் ஏ அணியினரும் பிடித்தனர். மாறாக, நான்காவது இடத்தை அம்பாங் அணியினர் வெற்றிக் கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker