Latestமலேசியா

அமைச்சரின் மகன் செய்யும் அதிகாரத் துஷ்பிரயோகம்! -எம்ஏசிசி விசாரணை

புத்ராஜெயா, நவ.22- அமைச்சு ஒன்றில் அதிகாரத் துஷ்பிரயோகம் நடந்து வருவது தொடர்பான புகார் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி ஆராயவிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சில் நடக்கும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார் குறித்து தங்களுக்கு தெரியுமா? என்று செய்தியாளர்கள் பிரதமர் துன் மகாதீரிடம் கேள்வி எழுப்பிய போது ”அது குறித்து எம்ஏசிசி விசாரணை நடத்தும்” என்று அவர் சொன்னார்.

ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் மகன், அந்த அமைச்சின் செயல்பாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பிரதமர் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த அமைச்சரின் மகன் தான் அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிக்கிறார் என்றும் எந்த நிறுவனம் குத்தகையைப் பெறவேண்டும் என்ற குத்தகை நடைமுறைகளையும் அவரே நிர்ணயிக்கிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker