Latestமலேசியா

‘கடந்த காலம்- எல்லோருக்கும் உண்டு!’ -வேதாவை தற்காத்தார் துன் மகாதீர்!

கோலாலம்பூர், நவ.22- எல்லோருக்குமே கடந்த காலப் பின்னணி உண்டு என்பதைனறிஉறுத்திய பிரதமர் துன் மகாதீர், அமைச்சர் வேதமூர்த்தியை தற்காக்கும் வகையில் பேசியுள்ளார்.

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில் ஹிண்ட்ராப் இயக்கத்தின் முன்னாள் தலைவரான வேதமூர்த்தியை தற்காத்து பேசினார் பிரதமர்.

‘நம்மில் எல்லோருக்குமே கடந்த காலம் என ஒன்று உண்டு. நான் அம்னோவில் இருந்து தான் வந்தேன். நான் அம்னோவில் இருந்தேன் என்பதற்காக, இப்போது பக்காத்தான் ஹராப்பானில் நான் இருக்க முடியாதா? என்று செர்டாங்கில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது துன் மகாதீர் வினவினார்.

அரசாங்கம் இந்தியர்களை ஒடுக்கிவிட்டது என்றும் ஓரங்கட்டி விட்டது என்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேதமூர்த்தி பேசியது தொடர்பில் இப்போது அவர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரதமர் துறையில் ஒற்றுமை மற்றும் சமூகநலத் துறை அமைச்சராக வேதமூர்த்தி தற்போது பதவி வகித்து வருகிறார்.

வேதமூர்த்தியின் அந்தக் கருத்து, மிகத் தீவிரமான ஏமாற்றத்தின் வெளிப்பாடாக, மலேசிய இந்தியர்களின் நிலை குறித்து அனைத்துலக கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அமைந்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

‘அது நடந்தது அப்போது. ஆனால், அவர் இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார். அந்தக் காலத்தில் அவர் சொன்ன கருத்தை அவர் இப்போதும் கொண்டிருக்கவில்லை” என்று அவர் விளக்கினார்.

மலேசியாவின் தோற்றத்தைக் களங்கப்படுத்தி விட்டதாக அவரைக் குறை கூறுவதற்கு காரணமான அந்த வீடியோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அப்போது நிலைமை வேறாக இருந்தது என்று வேதமூர்த்தியே விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் பேரணி நடத்தப்பட்ட பின்னர் டச்சு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சிறுபன்மையினருக்கு எதிராக குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை நடப்பதாக அவர் அதில் குற்றஞ்சாட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker