Latestமலேசியா

குறைந்த சம்பளம்: 3D வேலைகளைச் செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை!- குலா

கோலாலம்பூர்,நவ.22- குறைந்த ஊதியம் வழங்கப்படும் காரணத்தினாலேயே இளைஞர்கள் நாட்டிலுள்ள 3D என சொல்லப்படும் அழுக்கு, கடுமையான மற்றும் ஆபத்தான (dirty, difficult, dangerous) வேலைகளை செய்ய முன் வருவதில்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

நடப்பு சூழலில் மக்களுக்கு பெரும் அழுத்தமாய் அமைந்திருக்கும் பொருளாதார சூழலுக்கு ஏற்ற ஊதியம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் எந்த நிலையிலான வேலையையும் செய்ய தயாராக இருப்பர் என்பதை அவர் சுட்டிக் காண்பித்தார்.

அதே சமயம், சிங்கப்பூரில் சம்பளம் அதிகம் வழங்கப்படுவதால் அதிகமான மலேசியர்கள் இதே 3D வேலைகளை அந்நாட்டில் செய்கின்றனர் என்றார் அவர்.

ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் 3D சம்பளம் குறித்து கேட்ட கூடுதல் கேள்விகளுக்கு குலா இவ்வாறு பதிலளித்தார்.

தற்போது 3D வேலைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்த வேலைகளுக்கான சம்பளம் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒருவேளை, சம்பளம் உயர்த்தப்பட்டால், சிங்கப்பூரிலும், ஆஸ்திரேலியாவிலும் 3D வேலைகளைச் செய்யும் மலேசியர்கள் நாடு திரும்ப சாத்தியமுள்ளது என்றும் அவர் சொன்னார்.

நாட்டில், 15-லிருந்து 24 வயதுக்குட்பட்ட 516,400 இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மாறாக, இவ்வாண்டு மட்டும் 140,977 பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker