Latestஉலகம்

கைவிட்ட காதலனை கொன்று சமைத்து விருந்து போட்ட மொராக்கோ பெண்!

அபுதாபி, நவ. 22- கைவிட்ட காதலனை கொன்று சமைத்து ‘கறி’ விருந்து பரிமாறியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் மொராக்கோ நாட்டுப்பெண்ணை போலிசார் கைது செய்தனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும் மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த இளைஞருக்கும் சுமார் 7 ஆண்டு கால தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் காதலி மீது கொண்ட காதல் கசந்துப்போன நிலையில் ”நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என அவளிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதனால், இவ்வளவு காலமாக அவர் செய்து வந்த பண உதவிகள் நின்றுப் போகும் என்று ஆத்திரமடைந்த அந்தப் பெண், தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து தாக்கிக் கொன்றார்.

பின்னர் அவரது உடலை துண்டுத் துண்டாக வெட்டி மிச்சியில் போட்டு கொத்துக் கறியாக்கினார். அந்த கொத்துக் கறியினை கொண்டு ஐக்கிய அரசு அமீரகம் பகுதியில் மிகவும் பிரசித்தியான ‘மச்பூஸ்’ (பிரியாணி போல) கொத்துக்கறிச் சோறு சமைத்தார்.

அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் தொழிலாளிகளுக்கு சுடச்சுட கறி விருந்தாக பரிமாறி மகிழ்ந்தார்.

இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல் போன அந்த இளைஞ்ரை தேடி அவரது சகோதரர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அண்மையில் விசாரிக்க சென்றார்.

“என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை’ என ஆவேசமாக பதிலளித்தார்.அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், அல்-ஐன் நகர போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து அந்தப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த மிக்சியில் இருந்து சில தடயங்களை கண்டுபிடித்து தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகார் அளித்த நபரின் மரபணுவும் அந்த தடயத்தின் மரபணுவும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடவியல் பரிசோதனையில் அது நதப் பெண்ணின் முன்னாள் காதலருடையது தான் எனக் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னரே அவரது முன்னாள் காதலி கொன்று கறி விருந்து படைத்த கதை வெட்ட வெளிச்சமானது.

போலீசார் அப்பெண்ணை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாக வளைகுடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker