Latestமலேசியா

டிசம்பர் 1 முதல் சிங்கப்பூருக்கான ‘Firefly’ விமானச் சேவைகள் நிறுத்தம்!

கோலாலம்பூர்,நவ.22- டிசம்பர் முதலாம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகள் நிறுத்தப்படவிருப்பதாக Firefly நிறுவனம் அறிவித்துள்ளது. Firefly, மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும்.

போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து ஆணையத்துடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்ட பிறகு அடுத்தக் கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து Firefly நிறுவனம் தனது சேவைகளை சிங்கப்பூரின் புதிய விமான நிலையமான செலத்தார் விமான நிலையத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் வரையில் சிங்கப்பூருக்கான சேவைகளை Firefly நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

சுபாங், ஈப்போ, குவாந்தான் ஆகிய நகர்களிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வகையில் ஒரு நாளைக்கு சுமார் 20 விமான சேவைகளை Firefly வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker