Latestமலேசியா

பக்காத்தான் எம்.பி.களை வாங்கச் சதியா?–நஜிப் மறுப்பு!

கோலாலம்பூர், நவ.22- கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவும் தருவாயில், மலாய்-முஸ்லீம் கூட்டணி அமைக்கப் பட்டால் மட்டுமே, மலாய்க்காரர்களின் உரிமை காக்கப் படும் என்று கூறி, தேசிய முன்னணி பக்காத்தான் எம்பிகளை வாங்க முயற்சித்தது என்று கூறப்பட்ட தகவலில் துளியும் உண்மையில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்  கூறினார்.

பக்காத்தான் எம்பிகளின் ஆதரவை பெற்று மீண்டும் அரசாங்கம் அமைக்க அம்னோ அந்த முயற்சியை மேற்கொள்ளுமாறு யாரும் யாருக்கும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
“மற்ற கட்சிகள் அந்த முயற்சியை எடுத்தனவா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரையும் கட்சி தாவுமாறு கூறவில்லை” என்றார் அவர்.

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் பக்காத்தான் எம்பிகள் சிலரை கட்சி தாவுமாறு கேட்டுக் கொண்டதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இஸ்லாம் மதம் மதிக்கப் படாது என்ற பயத்தில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் அவ்வாறு பக்காத்தான் எம்பிகளை கேட்டுக் கொண்டதாக மகாதீர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துன் மகாதீர் வெளியிட்ட தகவல்கள் குறித்து கருத்துரைக்க அம்னோ கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மறுத்து விட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker