Latestமலேசியா

மாணவர் முழக்கம் அனைத்துலக போட்டி: வெற்றிக்கொடியுடன் கிவேஷா வழியனுப்பு!

ஈப்போ, நவ.22- சிங்கப்பூரில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து பங்கேற்கவிருக்கும் மூன்று மாணவர்களில் ஒருவரான மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி கிவேஷா சுந்தர் வெற்றியை நிலைநாட்ட அவரது பள்ளி அவருக்கு சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சியை நடத்தியது.

அவ்வகையில், அவர் வெற்றிப் பெற்று திரும்ப பள்ளி நிர்வாகம் அவருக்கு தேசிய கொடி வழங்கி சிறப்பித்தது.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், பேராக் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் தமிழ்மொழி உதவி இயக்குனர் சந்திரசேகரன், வாரியத் தலைவர் புண்ணியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராமராஜ், போலீஸ் அதிகாரி சார்ஜன் ஜர்ஜிட் சிங் உட்பட பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் 7 நாடுகள் பங்கேற்கும் அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து, கிவேஷாவுடன் கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் கமல்ராஜ் குணாளன் மற்றும் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த நவீன் செல்வசுப்ரமணியம் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

முன்னதாகப் பேசிய பள்ளியில் தலைமையாசிரியர் திருமதி.மாரியம்மா மாணவி கிவேஷாவின் வெற்றிப் பயணம் குறித்து தமதுரையில் குறிப்பிட்டுப் பேசினார். பொறுப்பாசிரியர் திருமதி தமிழரசி மற்றும் தமிழ்மொழி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும் உழைப்பும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. எட்டு ஆண்டுகள் தொடர்ந்து மாணவர் முழக்கம் போட்டியில் கலந்துவரும் எங்கள் பள்ளிக்கு இந்த முறை மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker