Latestஇந்தியாஉலகம்சினிமா

ரன்வீர் – தீபிகா திருமணத்துக்கு சீக்கிய குருமார்கள் எதிர்ப்பு

மும்பை, நவ.22- பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்- நடிகர் ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் மிக பிரமாண்டமான முறையில் நடந்தேறியது.

அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் திருமண நிகழ்ச்சி நடந்தது. தீபிகா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கொங்கணி இனத்தைச் சேர்ந்தவர். எனவே கொங்கணி முறைப்படி ஒரு நாளும்- ரன்வீர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். சீக்கிய முறைப்படி ஒரு நாளும் திருமணம் நடந்தது. சீக்கிய குருமார்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

ஆனால் சீக்கிய திருமணம் குருத்வாராவில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் . நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக்கூடாது.

எனவே இந்த திருமணத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சீக்கிய தலைவர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

தீபிகா மற்றும் ரன்வீர் சிங் திருமணம் சீக்கிய முறைக்கு எதிரானது. இது குறித்து குருத்வாரா கமிட்டியிடம் புகார் செய்யப்படும். 5 சீக்கிய குருமார்கள் இணைந்து இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker