Latestமலேசியா

2019 முதல் அந்நிய தொழிலாளர்களுக்கு சொக்சோ!

புத்ராஜெயா, நவ.22- சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ், ஜனவரி 1-ஆம் தேதி முதல், அந்நிய தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1925-ஆம் ஆண்டின் சமத்துவ சிகிச்சை (விபத்து இழப்பீடு) உடன்படிக்கை மற்றும் அந்நிய தொழிலாளர்கள் அமைப்பின் கீழ், சமநிலை பயன்பாடு மீதான மாநாட்டு குழுவுடனான மலேசியாவின் ஒப்பந்தத்தின் கீழ், அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கு சொக்சோ வழங்கப் படலாம் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

“சட்டப்பூர்வமாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமிக்கும் முதலாளிகள், அந்த அந்நிய தொழிலாளர்களை சொக்சோவின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், 1969-ஆம் ஆண்டின் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின் (4-ஆவது விதிமுறையின் கீழ்) வேலை இட காயம் திட்டத்தில் அவர்களுக்கு (தொழிலாளர்களுக்கு) முதலாளிகள் பங்களிக்க வேண்டும்.

“சொக்சோவின் கீழ், அந்நிய தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு, தற்காலிக ஊன பாதுகாப்பு, நிரந்தர ஊனம் பாதுகாப்பு, அன்றாடம் வேலைக்கு வருவதற்கான அலவன்ஸ், தொழிலாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு, மற்றும் அவர்கள் மரணமடைந்தால் அடக்கச் செலவிற்கு ரிம.6,500 போன்ற பாதுகாப்புகள் (நலன்கள்) வழங்கப் படுகின்றன” என்று குலா அறிக்கை ஒன்றில் கூறினார்.

இருந்த போதிலும், சொக்சோ சட்டத்தின் ஓய்வூதிய திட்ட முரண்பாடு (4-ஆவது விதிமுறை) கீழ், அந்நிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப் படாது என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“தங்களின் அந்நிய தொழிலாளர்களை சொக்சோவின் கீழ் பதிவு செய்ய, நாட்டிலுள்ள 54 சொக்சோ அலுவலகங்களுக்கு முதலாளிகள் செல்லலாம். சொக்சோவுடன் இணைந்து மனிதவள அமைச்சு, பங்குத்தாரர்களுடனான உறுதிபாடுகளை உறுதி செய்யும்” என்று குலா சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker