Latestமலேசியா

ஆடவருக்கு யோகம் அடித்தது! லாட்டரியில் ரிம.3 மில்லியன் பரிசு!

கோலாலம்பூர்,நவ.23- சிலாங்கூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் லாட்டரி குலுக்கலில் 3.1 மில்லியன் ரிங்கிட் வென்றுள்ளார்.

என்னவோ நல்லதாக நடக்கப் போவதாகத் தனக்கு தோன்றியதும் தான் வழக்கமாக வேலை முடிந்து செல்லும் ‘Da Ma Cai’ லாட்டரி கடைக்கு அந்த ஆடவர் சென்றிருக்கிறார். அங்கு லாட்டரி எடுப்பதற்கு பணப் பையில் இருந்து எடுத்தபோது ரசீது ஒன்று அவர் கண்ணுக்குத் தென்பட்டது.

அந்த ரசீது முதியோர் இல்லம் ஒன்றுக்கு நன்கொடை வழங்கியதற்காக அவர் அந்த ரசீதைப் பெற்றுள்ளார். அந்த ரசீதில் 123901 என்ற சீரியல் நம்பர் இருந்திருக்கிறது. அந்த எண்களுடன் தனது ராசி எண்ணையும் இணைத்து அவர் 3+3D போனஸ் லாட்டரி எடுத்திருக்கிறார்.

அந்த லாட்டரிக்கு 2,996,466 ரிங்கிட் போனசாக கிடைத்தது மட்டுமின்றி, அவர் அதற்கு முதல் பரிசாக 120,000 ரிங்கிட்டையும் பரிசாக வென்றார். ஒட்டுமொத்தமாக அவருக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் கிடைத்தது.

தான் வென்ற இந்த பரிசுப் பணத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக மேலும் சில ஆதரவற்ற இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker