Latestமலேசியா

இந்திய ஆடவரை போலீஸ் சுட்டது ஏன்?- டேவிட் மார்சல் கேள்வி- (video)

ஜோர்ஜ் டவுன்,நவ.23- கொம்தார் பேரங்காடி அருகே சண்முகசுந்தரம் என்ற இந்திய ஆடவர் போலீசாரால் சுடப்பட்டு இறந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினரும், மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைவருமான டேவிட் மார்சல் காணொளி ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தங்களை அந்த ஆடவர் கத்தியால் தாக்க முயன்றதற்காக அவரைச் சுட்டதாக சம்பந்தப்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

“தங்களை தற்காப்பதற்காக போலீசார் சண்முகசுந்தரத்துக்கு எதிராக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் தவறில்லை. ஆனால், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் காலில் அல்லது வேறு உடள் பகுதிகளில் சுட்டிருக்கலாமே? ஏன், சரியாக தலையைப் பார்த்து குறி வைக்க வேண்டும்?” என டேவிட் மார்சல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சண்முகசுந்தரத்திற்கு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கெனவே 15 குற்றப்பதிவுகள் இருப்பதாக தெரிகிறது. அப்படியே அவருக்கு அத்தகைய குற்றப்பதிவுகள் இருந்தாலும் அதற்கும் இன்று நிகழ்ந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதால் அவரை சுட்டுக் கொலை செய்திருக்க அவசியம் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆகையால், போலீசாரின் இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ தெய்வீகன் விளக்கமளிக்க வேண்டும்; இல்லையேல் பதவி விலகுமாறு டேவிட் மார்சல் அக்காணொளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kes Polis tembak mati seorang lelaki India di Pulau Pinang!!

Posted by Malaysian Tamilar Kural on Friday, 23 November 2018

இன்று மாலை 3.10 மணி அளவில் கொம்தார் அருகில்,சண்முகசுந்தரத்திற்கும் 70 வயது சீன முதியவர் ஒருவருக்கும் இடையே நடந்த கைகலப்பை போலீசார் தடுக்க முற்பட்டபோது சண்முகசுந்தரம் தன்னிடம் இருந்த 7 இன்ச் கத்தியைக் கொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரை தாக்க முயற்சித்திருக்கிறார்.

அதனால், வேறு வழி இல்லாமல் தங்களைத் தற்காத்துக்கொள்ள போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் அவர் தலையில் சூடுபட்டு இறந்தார்.

சண்முகசுந்தரத்தின் சடலம் சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker