Latestமலேசியாவிளையாட்டு

கெடா அணியில் இணைந்தார் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் தனபாலன்!

கோலாலம்பூர்,நவ.23- சீ விளையாட்டின்போது கால்பந்து போட்டியில் மலேசியர்களின் பாராட்டுக்களைப் பெற்ற மலேசிய அணியின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் என்.தனபாலன் அடுத்த பருவத்தில் மலேசிய லீக் கால்பந்து போட்டியில் கெடா கால்பந்து அணிக்காக விளையாடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணத்துவ கால்பந்து விளையாட்டாளர்கள் என்ற அடிப்படையில், தனபாலனுடன் ஹரிமாவ் மூடா அணியின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர் ஷாரூல் அஸ்வாரியும், சிலாங்கூரின் முன்னாள் மத்தியத் திடல் ஆட்டக்காரர்களான ஷாருல் இக்வான் ஷாம்சுடின், அஸ்மீர் யூசோப்பும் கெடா அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எந்த விளையாட்டாளராக இருந்தாலும் தான் பிறந்து வளர்ந்த மாநிலத்திற்கு விளையாடவே விரும்புவார்கள். ஆனால், தற்போதைய கால்பந்து உலகில் நாம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது.

அந்த வகையில், அடுத்த பருவத்தில் கெடாவுக்காக விளையாடவிருக்கும் 23 வயது தனபாலன், தன்னை சிறந்த கால்பந்து விளையாட்டாளராக வார்த்தெடுத்த நெகிரி செம்பிலான் அணி, நிர்வாகி, சக விளையாட்டாளர்கள் ஆகியோருக்கும் நெகிரி செம்பிலான் ரசிகர்களுக்கும் தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ரந்தாவ் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலன் கடந்தாண்டு நடைபெற்ற சீ கால்பந்து போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியாட்டத்திற்கு தேசிய அணி செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இறுதியாட்டத்தில் மலேசியா தாய்லாந்திடம் தோல்வி கண்டாலும் தனபாலனின் அதிரடி ஆட்டம் பரவலாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker