உலகம்

மணமேடையில் காலைத் தொட்டு வணங்க பரஸ்பர உடன்பாடு கண்ட மணப்பெண்!

ஜெய்ப்பூர், நவ. 23- திருமணவ வைபவத்தின் போது மணப்பெண் மணமகனி காலில் விழுந்து வழங்கும் கலாசாரத்தை மாற்றி, பரஸ்பரம் இருவரும் ஒருவருகொருவர் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வதித்துக் கொள்ளும் புதிய கலாசாரத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு இந்திய மணமகளுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன

இந்தியாவின் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தீபா கோஸ்லா என்ற பெண்மணி தனது திருமணத்தின் போது மணமகனை மரியாதை நிமித்தமாக காலைத் தொட்டு வணங்கச் செய்துள்ளார்.

தனது 17 வயதில் சட்டம் படிப்பதற்காக நெதர்லாந்து சென்றவர் வழக்கறிஞரான பின்பு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இவருக்கும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வொலெக் புல்லெர் என்பவருக்கும் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து மரியாதை செலுத்தும் பாரம்பரியத்தை மாற்றி எழுதியிருக்கிறார் மணமகள் தீபா.

அது குறித்து மணமகள் தீபா பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது: பெண்கள் மட்டும் ஏன் ஆண்களின் காலைத் தொட்டு வணங்க வேண்டும். பரஸ்பர மரியாதை என்றால் இருவரும் காலைத்தொட்டு வணங்கிக் கொள்ளலாமே என்று நான் கேட்டவுடன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

அம்மாவினால் பதிலளிக்க முடியவில்லை. இருவரும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த கணம் நாங்கள் முடிவெடுத்தோம். இந்திய கலாசாரம் இதை அனுமதிக்காது எனத் தெரியும். இருந்தும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

திருமணம் நடந்து முடிந்த பிறகு யார் முதலில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது தான் சுவாரஸ்யம். உறவினர்களுக்குள் இதற்கு விவாதமாக மாற கடைசியில் மணமகன் வொலெக் புல்லெரே முதலில் காலைத்தொட்டு வணங்கினார். என்று மனைவி தீபா கூறினார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகியது. வலைத்தள வாசிகள் பலர் இந்தப் பரஸ்பர மரியாதை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker