Latestமலேசியா

ரந்தாவ் மறுதேர்தல்: கருத்துகளை முறையாக தெரிவிப்பீர்! –அன்வார்

கோலாலம்பூர், நவ.23- ரந்தாவ் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஶ்ரீராம் மீண்டும் நிறுத்தப்படலாம் என்ற தகவலை தொடர்ந்து, சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தங்களின் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் உண்டு என்ற போதிலும், அந்தக் கருத்துகள் முறையான தளத்தில் வெளியிடப் பட வேண்டும் என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

“அந்தத் தொகுதியின் உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. ஆனால், அந்தக் கருத்துகள் முறையான தளத்தில் பகிரப் பட வேண்டும்.

“ உறுப்பினர்களின் கருத்துகளை அரசியல் பணியகமும், நாங்களும் நன்கு ஆராய்ந்த பின்னர், போட்டியிடப் போவது யார் என்பதை அறிவிப்போம்” என்று அன்வார் சொன்னார்.

ரெம்பாவ் பிகேஆர் கிளைத் தலைவரான ஆர். தங்கம், ரந்தாவ் தொகுதியில் தனது மனைவியும், மகளிர் தலைவருமான ஏ.பத்மாவதி தான் போட்டியிட வேண்டும் என்று கூறுவதோடு, அங்கு டாக்டர் ஶ்ரீராம் போட்டியிடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரந்தாவ் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தான் அந்த இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். தனது மனைவி செண்டாயான் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அங்கு போட்டியிட அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு என்றும் தங்கம் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker