Latestஉலகம்

ராஜபக்சே மகன் செய்த வேலை அல்ல இது?

கொழும்பு, நவ. 23- இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சேவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்சே, புத்தரின் பீடத்தின் மீது கால் பதித்து நிற்பது போன்ற படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில், அந்தக் காரியத்தைச் செய்தது பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ எனத் தெரிய வந்துள்ளது.

புத்தர் சிலை பீடத்தின் மீது ரோஹித ராஜபக்சே கால் வைத்திருப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைத் தளங்களில் பரவி இலங்கையைக் கலக்கியது.
.
எனினும், அந்தப் புகைப்படம் போலியானது என்றும் அது வெட்டி ஒட்டப்பட்டது என்றும் ரோஹித ராஜபக்சே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், கீழ் மட்டமான அரசியலில் இருந்து விலகி அர்த்தமுள்ள விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு ரோஹித ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படத்தில் ரோஹிதவின் முகத்தை ஒட்டிய புகைப்படம் ஒன்றே சமூக வலைத்தளங்களில் இப்போது பரலாகி உள்ளது.

இந்தப் புகைப்படம் பெரும் சங்கடத்தை தமக்கு ஏறப்டுத்தி விட்டதாகவும் அவ்வாறு கால் வைத்து தானல்ல, மாராக அது ரொனால்டோ என்றும் ரோஹித ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker