Latestமலேசியா

வாகன ‘டிண்ட்’ கறுப்புத் தாள் மீது புதிய விதிமுறை அமலாகிறது!

கோலாலம்பூர், நவ.23- வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படும் ‘டிண்ட்’ (TINT) எனப்படும் கறுப்பு கண்ணாடித் தாள்கள் தொடர்பான புதிய விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் சொனார்.

அடுத்த மாதத்தில் நடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவிருக்கும் சாலை போக்குவரத்துச் சட்டம் தொடர்பான திருத்தங்களுக்கு பின்னர் டிண்ட் தாள்கள் ஒட்டப்படுவது தொடர்பிலான புதிய விதிமுறை குறித்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.

கடந்த கால அரசு நிர்வாகத்திலும் டிண்ட் தாள்கள் ஒட்டுவது தொடர்பிலான வழிகாட்டி விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளன. ஆகக் கடையாக இந்த விதிமுறை 2016 ஆம் ஆண்டில் மாற்றப் பட்டது. என்று அவர் சொன்னார்.

இந்த விதிமுறையின்படி தற்போது குறைந்தபட்சம் 70 விழுக்காடு வரையில் ஒளி ஊடுருவும் தன்மையை முன்புறக் கண்ணாடி கொண்டிருக்க வேண்டும்.

அதேவேளையில் பக்கவாட்டிலுள்ள முன்புறப் பக்க வாட்டக் கண்ணாடி 50 விழுக்காடு ஒளிபாயும் தன்மையும் பின்புறப் பக்க வாட்ட ஜன்னல் கண்ணாடிகளும் பின்புறக் கண்ணாடியும் 30 விழுக்காடு ஒளி பாயும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் மின்னியல் எண் பட்டைகளை அமல்படுத்துவது குறித்தும் ஆராயப்படுவதாக அந்தோனி லோக் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker