Latestஇந்தியா

பிரபல இசையமைப்பாளர் திட்டமிட்டு கொலையா? குடும்பத்தினர் ‘பகீர்’ தகவல்

திருவனந்தபுரம், நவ.24- கேரளாவில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர் திட்டமிட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இசையமைப்பாளர் பாலபாஸ்கர் தமது குடும்பத்துடன் கோவில் சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் சிக்கினார். அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் விபத்து நடந்த இடத்திலேயே பாலபாஸ்கரின் குழந்தை பலியானது.

பாலபாஸ்கரும் அவரது மனைவியும் லட்சுமியும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலபாஸ்கர் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். தீவிர சிகிச்சையில் இருந்த லட்சுமி தற்போது குணமடைந்து வருகிறார்.

கேரள மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவம் தற்போது அதிர்ச்சியான திருப்பத்தை எட்டியுள்ளது. லட்சுமி போலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலும் வாகன ஓட்டுனர் அர்ஜூனன் அளித்த வாக்குமூலத்திலும் முரண்பாடு உள்ளது என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவத்தின் போது வாகனம் ஓட்டியது பாலபாஸ்கர் என அர்ஜூனன் போலிசாரிடம் தெரிவித்திருந்த நிலையில் லட்சுமி அதை மறுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பாலக்காட்டு பகுதியில் உள்ள ஓர் ஆயுர்வேத மருத்துவமனை உரிமையாளருடன் பாலபாஸ்கருக்கு நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் இருந்தது எனவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு அளித்த மனுவில் பாலபாஸ்கரின்
உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் லட்சுமிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்கும் நட்பும் பணம் தொடர்பான நெருக்கமும் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த ஆயுர்வேத மருத்துவமனை உரிமையாளருக்கு நெருங்கிய உறவினரே இந்த அர்ஜூனன் எனவும் அவரே சம்பவத்தின் போது காரோட்டியாக இருந்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் திடீரென்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கட்டாயம் ஏன் எனவும் கோவிலுக்கு செல்வது மட்டுமா நோக்கம் எனவும் உரிய
விசாரணை மேற்கொள்ள முதலமைச்சரிடம் இசையமைப்பாளர் பாலபாஸ்கர் குடும்பம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker