Latestமலேசியா

சிறார் பாலியல்; புதிய சட்டத்தின் கீழ் தண்டிப்பது எளிது! -ஹனிபா

கோலாலம்பூர், நவ.26- சிறார் பாலியல் குற்றங்களைப் புரியும் நபர்களை 2017-ஆம் ஆண்டின் சிறார் பாலியல் குற்றங்களை எதிர்க்கும் சட்டத்தின் கீழ் தண்டிப்பது எளிதாக உள்ளதாக பிரதமர் துறையின் துணை அமைச்சர் ஹனிபா மைதீன் கூறினார்.

முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப் பட்ட அச்சட்டத்தில் சில பலவீனங்கள் உள்ள போதிலும், அது நன்கு விரிவாக உள்ளதாக அவர் அங்கீகரித்தார்.

“இச்சட்டம் முழுமைப் பெற்றுள்ளது என்று நான் கூறவில்லை. இதில் ஏதேனும் பின்னடைவுகள் எழுந்தால், அதனை நாங்கள் சரி செய்ய முயற்சிப்போம்.

“பொதுவாக, சிறார் பாலியல் கொடுமைகள் தொடர்பிலான வழக்குகளை வாதாடும் வேளையில், ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. மாறாக, விசாரணையை வழிநடத்துவதில் தான் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது எனக்கு தெரிய வந்துள்ளது.

“சில சமயங்களில், சிறார் பாலியல் கொடுமைகள் குறித்து போலீஸ் புகார் செய்தவர்கள், அந்தப் புகார்களை வாபஸ் வாங்கிக் கொள்கின்றனர். அல்லது, வழக்கு விசாரணைக்கு வரும் போது, அவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை.

“பணப் பற்றாக்குறையால், சம்பந்தப் பட்டவர்கள் வாபஸ் அல்லது நீதிமன்றம் வருவதில்லை எனும் பட்சத்தில், அப்பிரச்சனையை களைய முயற்சிகளை எடுக்குமாறு நான் எனது அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்” என்று ஹனிபா சொன்னார்.

நடப்பில் உள்ள 2017-ஆம் ஆண்டின் சிறார் பாலியல் குற்றங்களை எதிர்க்கும் சட்டம் நடைமுறைக்கு ஏற்ப உள்ளதா அல்லது அதில் திருத்தங்கள் செய்யப் பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஹனிபா அவ்வாறு பதிலளித்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் காமுகர்களை தண்டிக்க அச்சட்டம் ஏதுவாக அமைந்துள்ளது என்று ஹனிபா உறுதிப் படுத்தினார்.

இதனிடையில், 11 மாதக் குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமான ஆடவன் ஒருவர், 2017-ஆம் ஆண்டின் சிறார் பாலியல் குற்றங்களை எதிர்க்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் படுவானா என்ற கேள்விக்கு, “இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

“அந்தக் குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டிருந்தாலும், அது மரணமடைந்து விட்டது. ஆதலால், அந்த ஆடவன் கொலை வழக்கின் கீழ் குற்றஞ்சாட்டப் படுவான்” என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker