Latestமலேசியா

சீபில்ட் ஆலய அராஜகம்: இந்தியக் கும்பல்கள் மோதல் அல்ல; போலீசின் தப்பான தகவல்- வேதா கண்டனம்!- (video)

கோலாலம்பூர்,நவ.26- இன்று சீபீல்ட் ஆலயத்தில் நடந்த அராஜக சம்பவமானது, இரு தரப்பு இந்திய கும்பல்கள் இடையே நடந்த மோதல் அல்ல. அவ்வாறு சுபாங் ஜெயா போலீஸ் கூறி இருப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்தார்.

போலீசாரின் அந்த அறிக்கை இந்திய சமுதாயத்தின் மத்தியில் கடும் பதற்றத்தை உருவாக்கிவிட்டு விட்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஆலயத்திற்குள் அத்துமீறு நுழைந்த அந்தக் கும்பலின் அராஜக செயலின் பின்னணியில் உள்ள உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து விரைந்து தீவிர விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் மேற்கொள்ள வேண்டும் என்று தாம் தேசியப் போலீஸ் தலைவரைக் கேட்டுக் கொள்வதாக வேதமூர்த்தி சொன்னார்.

இன்று பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களான எம்.குலசேகரன், சேவியர் ஜெயக்குமார், கோபிந்த் சிங், வேதமூர்த்தி, சிவராசா ராசையா ஆகியோர் ஒன்று சேர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் வேதமூர்த்தி விளக்கமளித்தார்.

மேலும், அதிகாலையில் ஆலயத்தில் என்ன நடந்தது என்று சரியாக ஆராயாமல், சீபீல்ட் ஆலயப் பிரச்னையில் இரு இந்திய கும்பல்களிடையே கைகலப்பு ஏற்பட்டது என்று நடந்த உண்மைக்கு மாறாக தகவலை வெளியிட்ட சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் மீது விசாரணை நடத்த வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐஜிபிக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

சுபாங் ஜெயா போலீஸ் வெளியிட்ட உண்மையற்ற, பொறுப்பற்ற தகவல் இந்திய மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.

“அதுமட்டுமின்றி, சம்பவம் நிகழ்ந்தது அதிகாலை 2 மணியளவில். ஆனால், ஒரே ஒரு போலீஸ் கார் விடியற்காலை 4.15 மணிக்கு வந்தது. பிறகு காலை 6 மணி மட்டுமே FRU போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏன் இந்த தாமதம்?” என்று வேதமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

“சீபில்ட் ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த ஆடவர்கள் கும்பல் ஆலய உடமைகளைச் சேதப்படுத்தியதும் இல்லாமல், பக்தர்களை தாக்கியுள்ளது. பெண்கள் கழுத்திலும் பாராங் கத்தி வைத்துள்ளனர். சிலர் காயமுற்றுள்ளனர். இந்த அராஜகத்துக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை புக்கிட் அமான் தலைமையகம் தீவிர விசாரணை செய்ய வேண்டும்” என்றும் வேதமூர்த்தி வலியுறுத்தினார்.

Statement by four Cabinet Ministers on the Seafield Sri Maha Mariamman temple today (26/11/2018)THE SRI MAHA MUTHU MARIAMMAN SEAFIELD TEMPLEWe were informed in the early hours this morning at about 2.30am, a large group of at least 50 persons armed with iron rods and parang forcibly entered the Seafield temple and attacked a group of devotees who had gathered there including women. The ensuing violence resulted in a number of persons injured and hospitalised. A number of vehicles were also torched. It is learnt that during the violence, five devotees were held hostage for some time by the intruders.The temple devotees finally managed to drive off the intruders, seizing identity cards from several of them. The Subang Jaya police officers finally arrived on the scene following the violence and subsequently cordoned off the area. Questions are being raised as to why only a single patrol car from the Subang Jaya police force arrived at the scene about 4.15am while the FRU only arrived at about 6am.The Subang Jaya police have regrettably issued a statement saying that “pergaduhan antara dua kumpulan bangsa India telah berlaku di dalam kawasan Kuil Sri Mahamariaman …punca kejadian adalah perselisihan faham antara dua kumpulan adalah tentang isu perpindahan kuil..”This statement is false and irresponsible. It has created much tension amongst the Indian community especially in the light of the late and ineffective response by the Subang Jaya police.We call upon the IGP to ensure that a corrective statement is immediately issued to set the facts straight. The Subang Jaya police should be investigated and disciplinary action taken.We condemn this unprovoked attack on the temple.We call for a full and independent inquiry by the police to establish who is behind this serious attack on the temple and the motive for it. Those responsible for this violence must be caught and punished.This investigation should be conducted by Bukit Aman and not left to the Subang Jaya police to handle.YB M Kulasegaran YB Xavier JayakumarYB Gobind SinghYB P WaythamoorthyYB Sivarasa Rasiah26 November 2018

Posted by Waytha Moorthy Ponnusamy on Monday, 26 November 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker