Latestஉலகம்

தோழிகளிடம் விடுத்த சவால்: பேய் நகங்களோடு உலாவரும் அழகி!

மாஸ்கோ, நவ. 26- ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழிகளிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக ‘பேய்’ நகங்களை வளர்ந்து வருகிறார்,

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த 35 வயதான எலெனா ஷிலென்கோவா, பேய் நகங்களை நான்கு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

“நான் சிறுவயது முதலே நீளமான நகங்களை வளர்த்து வந்தேன். ஆனால் ஒரு முறை என்னுடைய ஆசிரியை அதனை நறுக்கி விட்டார். என்னுடைய தோழிகள், இனிமேல் உன்னால் நீளமான நகங்களை என்னால் வளர்க்க முடியாது என என்னிடம் சவால் விட்டார்கள். நான் வளர்த்து காட்டுகிறேன் என கூறி கடந்த 4 வருடம் 3 மாதங்களாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன்.

இதனால், நான் பெரிய கஷ்டம் எதையும் சந்திக்கவில்லை.ஆனால் எனக்கு பிடித்தமான டென்னிஸ் விளையாட்டு விளையாட முடியவில்லை. கடலில் நீந்துவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் நகம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கடலுக்கு செல்வதில்லை.இரவு நேரங்களில் என்னுடைய நகம் உடைந்து விட்டதை போல கனவுகள் வரும் நான் உடனே பயந்து போய் நடு இரவில் எழுந்து சரி செய்வேன்.

ரஷ்யா குளிராக இருக்கும் என்பதால் நான் தெருக்களில் செல்லும் போது அதிக பட்சம் என்னுடைய ஆடைக்குள் தான் கைகளை விட்டுக் கொண்டு செல்வேன்.

ஒருசில சமயம் பொதுமக்கள் என் கைகளை பார்த்து பயந்து ஒதுங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் பாராட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த நகங்களை வளர்ப்பதால் நான் ஆண்களை கவர வேண்டுமென நினைத்ததில்லை.

என்னை யாராவது ஒரு முறை பார்த்தால் வாழ்நாளில் என்னை மறக்கக்கூடாது என்பதற்காக வளர்த்து வருகிறேன். இவ்வாறு எலெனா ஷிலென்கோவா தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker