Latestமலேசியா

பாரிசான் விட்டுச் சென்ற பிரச்சனைகள்-பக்காத்தான் எடுத்த நடவடிக்கைகள்? 2019-இல் முழு அறிக்கை வெளியிடப்படும்!

கோலாலம்பூர்,நவ.26- நாட்டின் ஆட்சியைப் பிடித்ததற்கு பிறகு நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையை அடுத்த ஆண்டு வெளியிடவிருப்பதாக பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச் சென்ற பிரச்சினைகளைச் சமாளிக்க தமது அரசாங்கம் என்னவெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம்பெறும் என்றார் அவர்.

புதிய அரசாங்கத்தின் கீழ் மலேசியா மீண்டும் ஆசியாவின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழும் எனும் வாக்குறுதியையும் துன் மகாதீர் மீண்டும் அளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker