Latestமலேசியா

சீபில்ட் ஆலயத்தின் முன் வன்முறை; நான்கு இந்திய ஆடவர்கள் கைது!

ஷா ஆலாம்,நவ.27- நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் அருகே நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களை கைது செய்துள்ளனர்.

இருவர் நேற்று இரவும், மேலும் இருவர் இன்று அதிகாலையிலும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

அவர்களில் முதலில் கைதான ஆடவர்களிடம் இருந்து பாராங் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“ஐந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கார்கள் கோயிலுக்கு அருகிலேயே எரியூட்டப்பட்டன. மாறாக, வேன் ஒன்று ஓன் சிட்டி பேரங்காடிக்கு அருகில் தீ மூட்டப்பட்டது. இப்படியாக மொத்த 23 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது” என்று மஸ்லான் இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும், தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு அவர் தற்போது சுபாங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker