Latestமலேசியா

சீபில்ட் ஆலய கலவரம்: நஜிப் வருத்தம்!

கோலாலம்பூர்,நவ.27- நேற்றுமுன்தினம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கும்பல் ஒன்று புரிந்த அராஜக செயலை அடுத்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“எனது தலைமைத்துவத்தின்போது சட்டத்தை மீறிய இத்தகைய சர்ச்சை, வன்முறை செயல்
நடந்ததே இல்லை.

“எந்தவோர் இடமாற்ற பிரச்சனையும் அனைத்து தரப்பினரின் சம்மதத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய முன்னணி அரசில், மக்களுக்கு சாதகமான முடிவே அதிகம் எடுக்கப்பட்டது” என்று நஜிப் தமது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

அந்த வகையில், இந்த விவகாரத்தில் அமலாக்கத் தரப்பி துல்லிய விசாரணையை நடத்தும் என்றும் இந்தப் பிரச்சனையின் முடிவு மக்களுக்கு சாதமாக இருக்க வேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அந்த பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“இத்தனை காலமாக நாம் நிலைநாட்டி வந்த ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிடக் கூடாது. மலேசியா நம் எல்லோரின் தாயகம்” என்றும் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker