Latestமலேசியா

சீபில்ட் கோயில் மண்டபத்தில் வேதமூர்த்தி பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு!

சுபாங் ஜெயா,நவ.27- சீபில்ட் கோயில் விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த நடவடிக்கைக் குழுவின் அழைப்பின் பேரில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி இன்று கோயிலுக்கு நேரடியாக வருகை புரிந்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசினார்.

அமைச்சர் வேதமூர்த்தியுடன் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கோயிலில் முதல் நாள் இரவு நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பக்தர்களில் சிலரும் கோயில் நடவடிக்கைக் குழுவினரும் தங்களின் ஆதங்கத்தை கேள்விகளாகத் தொடுத்த வண்ணம் இருந்தனர்.

அவர்களுக்கு வேதமூர்த்தி பதில் விளக்கம் வழங்கினார்.

“எனக்கும் இது குறித்த வருத்தமும் ஆதங்கமும் நிறைய இருக்கிறது. எனவே, நிறைய பேசிக் கொண்டே இருப்பதை விட நிதானமாக ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று வேதமூர்த்தி சுட்டிக் காட்டிய போதிலும் பலர் அவரது கருத்துக்கு அப்பால் தொடர்ந்து தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து புகார் செய்த வண்ணம் இருந்தனர்.

“இன்றைக்கு நீங்கள் எல்லாம் எங்களைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். ஏன் நேற்றே எங்களை வந்து சந்திக்க வரவில்லை? நாங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு நிற்கிறோம். அடிப்பட்டு நிற்கிறோம்” என்று சிலர் வேதமூர்த்தியிடம் வேதனையுடன் கூறினர். மேலும் பலர் சந்திப்பு நடக்கும் கோயில் மண்டபத்திற்கு வெளியே இருந்து கூச்சலிட்டனர்.

வேதமூர்த்தி செய்தியாளர்களுடான சந்திப்பை பல தடங்கலுக்கு இடையில் நடத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker