Latestமலேசியா

தீர்வு காணும் வரை சீபில்ட் கோயில் உடை படாது!- வேதா உறுதி

சுபாங் ஜெயா,நவ.27- சீபில்ட் கோயில் விவகாரம் தொடர்பில் உயர்மட்ட அளவில் விவாதிக்கப்படும். இந்தப் பிரச்சனைக்குத் தெளிவான தீர்வு ஒன்றை எட்டும் வரையில் இந்த கோயில் உடைக்கப்பட மாட்டாது என்று தாம் உறுதிக் கூறுவதாக பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி இன்று அறிவித்தார்.

சீபில்ட் கோயில் மண்டபத்தில் இன்று பிற்பகல் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

“இப்பிரச்சனையை இன்று காலை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவருடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். சீபில்ட் கோயில் சம்பவம் குறித்து அவர் மிகுந்த வேதனை தெரிவித்தார்” என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

“இது குறித்து உயர்மட்ட அளவில் விவாதிக்கப்படும். சிலாங்கூர் அரசும் இது குறித்து விவாதிக்கும். எனவே, பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் கோயில் உடைக்கப்படாது” என்று அவர் சொன்னார்.

“அதே வேளையில், நாம் அமைதி காக்க வேண்டும். முன்பு நடந்த பக்தர்கள் மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் போலீசார் அவர்களை விசாரணையை நடத்தட்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

“மேலும், இதனை இன பதட்டமாக கருத வேண்டாம். பல இன மக்கள் வாழும் மலேசியாவில் நாம் மலேசியர்கள் என்ற உணர்வு நிலை நிறுத்தப்பட வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker