Latestஉலகம்

மாலத்தீவு முன்னாள் அதிபரின் 13 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

கொழும்பு, நவ. 27-பயங்கரவாத வழக்கில் தொடர்புப்படுத்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷித்துக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷித் (வயது 49) கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத் பறிகொடுத்தார்.

அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முகம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். கடும் முதுகு வலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் சிகிச்சை பெற அரசிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. அவர் நாடு திரும்பி வர உத்தரவாதம் கேட்டது. அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததை அடுத்து மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்ற அவர் சிகிச்சைக்கு பின் இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்தார். மாலத்தீவு அதிபர் பதவி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார்.

புதிய அதிபராக இப்ராஹிம் முகம்மது பதவியேற்ற நிலையில் முகம்மது நஷீத் அண்மையில் தாய்நாடு திரும்பினார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முகம்மது நஷீத்துக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker