இந்தியாஉலகம்விளையாட்டு

அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது:- நடிகர் ஆரி

சென்னை, நவ. 28- அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தோனி கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி தெரிவித்தார்.

கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது.

அபிலாஷ்,லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது;

நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைபடுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும் தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.

ஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி செய்ய நேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker