Latestவாழ்க்கை

ஆஸ்துமா- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ‘கணேச முத்திரை!’

ஆஸ்துமா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் மக்களிடையே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற குளவிக்கு விடைதான் நம்மர்கள் காலங்காலமாய் கடைபிடித்து வரும் கணேச முத்திரை.

இந்நோய்களைக் கட்டுப்படுத்துகிறது கணேச முத்திரை என்றால் அந்த முத்திரையை எப்படிச் செய்வது என்பதை முதலில் அறிந்து கொள்ளலாம்.

செய்முறை: இடது கைவிரல்களை மடக்கி கைப் பாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும் . வலது கை விரல்களை மடக்கி இடது கை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும்.

மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை மாலை 15 நிமிடம் செய்வது நல்லது.

ஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாக சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது.

தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், ஆனாகதம், விசுத்தி, ஆக்ஹா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதில் நான்காவது சக்கரமான ஆனாகத்தை தூண்டவல்லதுதான் இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தினைக் குறைத்து தெம்பூட்டுவதாக மையும். மேலும் மூச்சினை சீராக்கி இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது கணேச முத்திரை. ஆஸ்துமாஈரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்த இந்த முத்திரை உதவும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker