Latestஉலகம்

இளவரசி மேகன் இரட்டைப் பிறவியா? ரஷ்யாவில் குழப்பம்!

மாஸ்கோ, நவ 28- ரஷ்ய தெருவில் பிரிட்டிஷ் இளவரசி மேகன் மார்க்கல் உருவத்தில் சுற்றி திரிந்த இளம்பெண்ணை பொதுமக்கள் பலரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரஷ்யாவை சேர்ந்த வால்டிஸ்லாவ் பர்னாஷேல் என்ற புகைப்படக் கலைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யேகாட்டெரின்புர்க் பகுதியில் பலரையும் படம் எடுத்துள்ளார்.

அதன் பின்னர் தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து புகைப் படங்களை ‘எடிட்டிங்’ செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு பெண் பிரிட்டன் இளவரசி மார்க்கல் உருவத்தில் இருப்பதை பார்த்து ஆச்சயம் அடைந்தார்.

அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் நான் படங்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது இளவரசர் ஹர்ரியின் மனைவி மேகன் மார்க்கல் போன்ற உருவத்தில் ஓர் இளம்பெண்ணை பார்த்தேன். ‘நான் அது மார்க்கல் தான் என உணர்ந்தேன். நீங்கள் எப்படி?’ என கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்தப் பெண்ணின் பெயர் அன்னா எனவும் அவருடைய முகவரி மற்றும் தொலைபேசி எண் குறித்த தகவலும் என்னிடம் இல்லை. யாரேனும் தகவல் கிடைத்தால் தெரியப் படுத்துங்கள் நான் ‘போட்டோஷூட்’ எடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் மார்க்கல் ஓர் இரட்டை பிறவி மருத்துவமனையிலேயே பிரிந்து போய்விட்டார்கள் எனவும் மற்றொரு மார்க்கல் அமெரிக்காவிற்கு தத்துக் கொடுக்கப் பட்டுள்ளார். அவருடைய சகோதரி ரஷ்யாவில் தங்கி விட்டார் என கருத்து பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான உருவ ஒற்றுமை உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைப்பதாக அமைந்துள்ளது என்று வலைத் தள வாசிகள் பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker