Latestமலேசியா

சீபில்டு கலவரம்; போலீஸை குறைகூறக் கூடாது! –ஸாஹிட்

கோலாலம்பூர், நவ.28- சுபாங் ஜெயா பகுதியிலுள்ள சீபீல்ட் ஆலய இடமாற்றம் தொடர்பில் எழுந்துள்ள கலவரத்தை தொடர்ந்து, நாட்டின் இன அமைதி மற்றும் நடப்பில் உள்ள சட்டத் திட்டங்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

கடந்த 36 மணி நேரங்களாக நீடித்து வரும் அந்தக் கலவரத்தை கட்டுப் படுத்த முடியாமல் போலீஸ் தரப்பு திணருகிறது என்று சிலர் சாடி வரும் வேளையில், சட்டத்தை மதிக்காதவர்களால் தான் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது என்று அவர் சொன்னார்.

“அவ்விவகாரம் தொடர்பில் போலீசாரை குறைக் கூறுவது தவறு. அனைவரும் சட்டத்தை மதித்திருந்தால், அக்கலவரம் ஏற்பட்டிருக்காது” என்று அவர் கூறினார்.

இந்து ஆலயங்கள் குறித்தான விவகாரங்கள் உணர்ச்சி சம்பந்தப் பட்டது என்றும், ஆலய விவகாரத்தால் தான் தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்த சிலாங்கூர் மாநிலம், கைமாறியது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நடந்துக் கொண்டிருக்கும் அந்தக் கலவரத்தை கட்டுப் படுத்தும் வேளையில், சில முக்கிய காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும் என்று அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.

“முதலாவதாக, வழிப்பாட்டு தளங்களின் உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் கவுன்சில்களின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

“இரண்டாவதாக, நாட்டில் அனைத்து தரப்பினரும் தங்களின் மத வழிப்பாட்டுகளில் சுதந்திரமாக ஈடுபடலாம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அந்த வழிப்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற மதத்தினரை மதிக்க வேண்டும் என்றும் யாரும் சட்டத்தை தங்களின் கைகளில் எடுக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker