Latestமலேசியா

சீபில்டு விவகாரம்: சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்! – கோபிந்த் சிங்

கோலாலம்பூர், நவ.28- சீபில்டு ஆலயத்தில் நடந்த தாக்குதல் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பியோர் மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வகையில் செயல்பட்டோர் ஆகியோருக்கு எதிரான ஆதாரங்களை தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) திரட்டி வருகிறது.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் சட்டத்திற்கு புறம்பான வகையில் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

ஒன்று திரட்டப்பட்ட ஆதாரங்கள் குறித்து விரிவாக ஆராயவதற்காக விரைவில் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்று அவர் சொன்னார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர், இந்தக் கோயில் கலவரம் குறித்துக் கருத்துரைக்கும் போது தங்களின் ஆவேசத்தை கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker