Latestமலேசியா

சீபில்ட் கோயில்: குண்டர்களை ஏவி விட்டது ஓன் சிட்டி வழக்கறிஞர்கள்- மொகிடின்

கோலாலம்பூர்,நவ.28- சீபில்ட் ஆலயத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் புகுந்து பக்தர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்திய மிகப் பெரிய குண்டர் கும்பலை ஏவி விட்டது ஓன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தான் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் அறிவித்துள்ளார்.

அந்த கோயில் நிலம் தொடர்பில் ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்களாக செயல்பட்டவர்கள் தான் குண்டர்களை கூலிக்கு அமர்த்தினர் என்று அவர் விளக்கினார்.

ஆலய நிலத்தை சட்ட முறைப்படி எடுத்துக்கொள்வது மீதான சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் அந்த நிறுவனத்திற்கு தொடர்புடையவர்கள் இந்த காரியத்தைப் புரிந்துள்ளனர் என்று புத்ராஜாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மொகிடின் தெரிவித்தார்.

நவம்பர் 26-ஆம் தேதி காலையில் மேம்பாட்டு நிறுவனத்திரும் போலீசாரும் வந்து ஆலய நிலத்தின் கட்டுபாட்டை தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக இந்த வழக்கறிஞர்கள் மலாய்க்காரர்களைக் கொண்ட ஒரு கும்பலை கூலிக்கு அமர்த்தி கோயிலுக்குள் அத்துமீறும்படி செய்திருக்கின்றனர்.

அத்துமீறி நுழைந்து கோயிலின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும் பணிக்காக அந்த குண்டர் கும்பலின் தலைவரிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பணம் கொடுக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையின் அடிப்படையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் சொன்னார்.

கிட்டத்தட்ட 50 பேர் இதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தொகை ஆளுக்கு 150 ரிங்கிட்டில் இருந்து 300 ரிங்கிட்தான் என்றார் அவர்.

இந்த அத்துமீறல் அராஜகம் தொடர்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 21 நபர்களில் கூலி குண்டர்களை அமர்த்திய இரு வழக்கறிஞர்களும் அடங்குவர் என தெரியவருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker