Latestமலேசியா

சீபில்ட் விவகாரம்: மஇகா இலவச வழக்கறிஞர் உதவி!

கோலாலம்பூர்,நவ.28- நேற்று முன்தினம் அதிகாலையில் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் குண்டர் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அராஜகம் புரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்களை இலவசமாக அமர்த்தி உதவத் தயாராக இருப்பதாக மஇகா அறிவித்துள்ளது.

ஓன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் கூலிக்கு அமர்த்திய குண்டர் கும்பல்தான் கோயிலில் அத்துமீறி நுழைந்து அராஜகம் புரிந்தது என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சி உதவ முன்வந்துள்ளதாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியும் என்றார் அவர்.

“தாக்கப்பட்டவர்களில் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். காயமுற்ற அவர்களை மஇகாதான் மருத்துவமனையில் சேர்த்தது. அவர்கள் இன்னும் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த வில்லை. அதனால், அந்த செலவை மஇகாவே ஏற்றுக் கொண்டது” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக 7 வழக்கறிஞர்களை மஇகா அமர்த்தியுள்ளது. அந்த வழக்கறிஞர்களில் நால்வர் கட்சி உறுப்பினர்கள் ஆவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker