Latestமலேசியா

டிசம்பர் 1: இந்து சமய அமைப்புகள்-ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம்- மாமன்றம் அழைக்கிறது

கோலாலம்பூர்,நவ.28- பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், தற்பொழுது மலேசிய இந்தியர்களுக்கிடையே, குறிப்பாக இந்துக்களிடையே நிலவி வரும் வருத்தமளிக்கும் இனத்துவேசச் செயல்கள், சமூக ஊடகங்களில் மனிதாபிமானமற்ற வகையில் கொச்சை மொழிகளால் வசைப்பாடும் அநாகரீகச் செயல்கள் போன்றவை மிகவும் வருத்தம் அளிப்பதாக மலேசிய இந்து தர்ம மாமன்றத் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தெரிவித்தார்.

சீபீல்ட் ஆலய விவகாரம் நமக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும். ஆகவே இந்துக்களாகிய நாம் ஒன்றிணந்து திட்டமிட்டுச் செயல்படும் நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில் இந்து ஆலயங்கள் உடைபடாமலிருக்க ஒரு முடிவு கட்ட வேண்டும்.

கடந்த கால, நிகழ்கால அரசாங்கங்களுக்கு ஆலய விவகாரம் குறித்து பல முறை பல கடிதங்கள்,மனுக்கள்,தீர்மானங்கள், மகஜர்கள் அனுப்பி அலுத்துப் போய் வீதி போராட்டமே நமக்கு கதியாகிவிட்டது. எனவே, நம் தலையெழுத்தை மாற்ற நாமே நல்லதொரு தீர்வை எடுக்க வேண்டும் என்றார் இராதாகிருஷ்ணன்.

ஆகவே, நாடு முழுவதுமுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், ஆசிரம ஆதினத் தலைமைப் பீடாதிபதிகள் முதலிய அனைவரும் ஒன்று திரள வேண்டும். அதற்காக, ஓர் அவசரக் கூட்டத்திற்கு இந்து தர்ம மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தக் கூட்டம், டிசம்பர் முதலாம் தேதி (சனிக்கிழமை) தலைநகர், புடு, சிக்னேச்சர் ஹோட்டல் (கோர்டுமலை பிள்ளையார் கோயில் பின்புறத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. ஒருமனதோடு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் நம் வருங்கால சந்ததியினரை நிம்மதியாக வாழ வைக்கவும் அக்கூட்டத்தில் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு இராதாகிருஷ்ணன் இந்து சார்ந்த அமைப்புகளையும், ஆலயத் தரப்புகளையும் கேட்டுக் கொண்டார்.

தங்கள் வருகையை முன் உறுதி செய்வது அவசியம். தொடர்புக்கு:
1) திரு.சுப்பிரமணி ( 013-3973134 )
2) திரு.ரமேஷ்குமார் ( 016-2085551 )
3) திரு.விசுவநாதன் ( 016-3392234 )
4) மாமன்ற அலுவலகம் ( 03-22761256 )
5) திரு.ரிஷிகுமார் ( 012-2016115 )

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker