Latestஇந்தியா

தமிழர்கள் எழுவரையும் விடுவிக்க வேண்டும்- நடிகர் சத்யராஜ்

சென்னை, நவ. 28- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழர்கள் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தினார்.

நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை மேடவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிய அவர் பின்னர் பத்திரிகையாளர்கள் சந்தித்தார்.

தந்தை பெரியார் மற்றும் எம்ஜிஆர் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட தமிழர்கள் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker