Latestமலேசியா

தீயணைப்பு வீரர் படுகாயம்: அது தாக்குதல் அல்ல; வாகன விபத்து- ஆலயக் குழு- (video)

சுபாங் ஜெயா,நவ.28- சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகே நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் அங்குக் கூடி இருந்த இந்திய கும்பலால் தாக்கப்பட்டார் என்பது உண்மையல்ல. மாறாக, அவர் அவ்விடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக காயமடைந்திருக்கிறார் என்று ஆலயத்தின் நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

சம்பவ நாளன்று சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் பின்னோக்கி நகர முற்பட்டபோது அந்த வாகனத்தின் பின்னால் நின்று கொண்டிருந்த மோதப்பட்டதாக சீபில்ட் ஆலய நடவடிக்கைக் குழுவின் செயலாளர் வி.கே.ரகு சுட்டிக் காட்டினார்.

“முதலில் தீயணைப்பு வாகனம் முன் செல்ல முற்பட்டது. ஆனால், முன்னே வாகனம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. எங்கே எரிந்து கொண்டிருந்த வாகனம் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தீயணைப்பு வாகனம் உடனே பின்னோக்கி நகர்ந்தது.

“அவர்களுக்கே தெரியாமல் பின்னால் இருந்த அடிப்பை அவர்கள் மோதித் தள்ளி விட்டனர்” என்று ரகு இன்று சீபில்ட் ஆலயத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.

நேற்று அதிகாலையில், சீபில்ட் ஆலயம் அருகே கார்கள் எரியூட்டப்பட்டபோது அவற்றை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர் அடிப் அங்குள்ள இந்திய கும்பலால் தாக்கப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடுமையான காயங்களுக்கு இலக்கான அடிப் தொடக்கத்தில் சுபாங் ஜெயா மருத்துவமனையில் சுயநினைவின்றி சேர்க்கப்பட்டார். நேற்று காலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்டது. எனினும், நேற்றிரவு அவர் தேசிய இருதய கழகத்திற்கு (IJN) மாற்றப்பட்டதும் இன்று அவர் உடல் நலம் தேறி வருவதாக தெரிய வந்துள்ளது.

Posted by Shankar Ganesh Siridharan on Tuesday, 27 November 2018

இதனிடையே, அடிப்பை தீயணைப்பு வாகனம்தான் இடித்துத் தள்ளியதாகவும், அப்போது அங்கிருந்த இந்திய மக்கள்தான் ஆம்புலன்சை வர வைத்து அவரை ஆம்புலன்சில் ஏற்ற உதவியதாக ரகு குறிப்பிட்டார். மாறாக, அவர்கள் அவரை தாக்கவில்லை என அவர் சொன்னார்.

நடந்த உண்மை நிலவரத்திற்கு சான்றாக தங்களிடம் வீடியோ இருப்பதாக ரகு கூறினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது என்றார் அவர்.

“எங்களுக்கு இன்றுதான் இந்தச் சான்று கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் போலீசில் புகார் செய்ய அவசியம் இல்லை. இந்த வீடியோவை நாங்கள் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கவிருக்கிறோம்” என்று ரகு தெரிவித்தார்.

Posted by Shankar Ganesh Siridharan on Tuesday, 27 November 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker