Latestசினிமா

பிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பை விரையும் ஹாலிவுட் பிரபலங்கள்

மும்பை, நவ 28- பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் நடைபெறுவதை தொடர்ந்து ஹாலிவுட் பிரபலங்கள் மும்பையில் குவியவிருக்கின்றனர்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப்-பாடகர் காதலித்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் நடந்தேறியது.

கடந்த மாதம் பிரியங்கா -ஜோனஸ் இருவரும் ஜோத்பூர் சென்று தாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பவன் அரண்மனையை பார்வையிட்டனர். இந்நிலையில் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பெவரில் ஹீல்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமணத்திற்கான சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நிக் ஜோனாஸ் தனது சகோதரர் ஜோ ஜோனாஸூடன் இந்தியா வந்துள்ளார். ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்தவரும் ஜோ ஜோனஸின் வருங்கால மனைவியுமான ஷோபி டர்னரும் மும்பைக்கு வந்துள்ளார்.

இவர்களைத் தவிர மேலும் சில ஹாலிவுட் பிரபலங்களும் இந்தியாவின் மும்பை நகருக்கு வருவர் எனக் கூறப்படுகிறது.இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஆகியோர் மும்பை ஜூஹூவில் உள்ள தங்கும் விடுதியில் நண்பர்களுக்கு விருந்து வைத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker