Latestமலேசியா

73 ரிங்கிட் விமான நிலைய வரியா? நியாயமில்லை! –ஏர் ஆசியா

சிப்பாங், நவ.28- ஆசியான் நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளிடம் ரிம.73-யை விமான நிலைய வரியாக வசூலிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவையும் மீறி தங்களின் விமானப் பயணிகளிடம் சேவை கட்டணமாக ரிம.50-யை தான் தாங்கள் வசூலிப்பதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியுள்ளது.

அதேவேளையில் விமான பயணிகளிடம் ரிம.73 விமான நிலைய வரி வசூலிப்பது நியாயமில்லை ஒன்று ஏர் ஆசியா தெரிவித்தது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள வசதிகளைப் போன்று இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வசதிகள் இல்லை.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அங்கிருந்து பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளிடம், கட்டாயமாக ரிம.73-யை வரியாக வசூலிப்பது நியாயமில்லை என்று ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமை செயல்நிலை அதிகாரி ரியாட் அஸ்மாட் கூறினார்.

“கே.எல்.ஐ.ஏவும் கே.எல்.ஐ.ஏ 2-யும் ஒன்று என்பது போல் வர்ணிக்கப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கே.எல்.ஐ.ஏ 2-இல் விமானங்களில் ஏறுவதற்கு முன்னர், பயணிகள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. கே.எல்.ஐ.ஏ 1-யில் பல்வேறான வசதிகள் உள்ளன” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி அமலில் உள்ள அரசாங்க விதிமுறையை, ஏர் ஆசியா நிறுவனம் பின்பற்றவில்லை என்று விமான பிரதிநிதிகளின் குழு, மலேசிய விமான நிலைய ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில், மலேசிய விமான நிலைய ஹோல்டிங்க்ஸ் மற்றும் இதர பங்குத் தாரர்களுடன் ஏர் ஆசியா நிறுவனம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது என்று ரியாட் சொன்னார்.

அந்த வரிக் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொது போக்குவரத்து துறை அமைச்சு பரிசீலித்து வருவதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் கூறியதை தாங்கள் வரவேற்பதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த பல ஆண்டுகளாக, மலிவான விமான சேவையை ஏர் ஆசியா நிறுவனம் தனது பயணிகளுக்கு வழங்கி வருவதாகவும், இந்த வரி வசூலிப்பால், அந்நிலைமை தொடராமல் போய் விடுமோ என்ற தயக்கம் தங்களுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker